| இனியும் பொறுமையா இருக்க தயாரில்லை! ரத்தினபுரி பாலத்தில் பயணித்தன வாகனங்கள் Dinamalar
இனியும் பொறுமையா இருக்க தயாரில்லை! ரத்தினபுரி பாலத்தில் பயணித்தன வாகனங்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:14

கோவை : ரத்தினபுரி அருகே தயிர் இட்டேரி கண்ணப்ப நகர் ரயில்வே கீழ்மட்ட பாலம் பணி, 90 சதவீதம் முடிந்து விட்டது. சங்கனுார், கண்ணப்ப நகர் மக்களின் போக்குவரத்து பிரச்னைக்கு, விமோசனம் கிடைத்துள்ளது.



கோவை, ரத்தினபுரி தயிர் இட்டேரியில், இயங்கிய ஆளில்லா ரயில்வே கேட் (கடவு எண்: 13) வழியாக, ரத்தினபுரி பகுதியில் இருந்து, சங்கனுார் மற்றும் கண்ணப்ப நகருக்கு ஏராளமான வாகனங்கள், தினமும் சென்று வந்தன. ரயில்கள் வரும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், மேம்பாலம் அல்லது கீழ்மட்ட பாலம் அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.ஆய்வு செய்த ரயில்வே அதிகாரிகள், கீழ்மட்ட பாலம் அமைக்க, கடந்த, 2016ல் பணியை துவக்கினர். கட்டுமான பணி துவங்கியதில் இருந்தே, வாகனங்கள், 3-4 கி.மீ., துாரம் வரை கண்ணப்ப நகர், சங்கனுார் பகுதிகளுக்கு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.தற்போது, 90 சதவீத பணி முடிக்கப்பட்டு விட்டது. தேர்தல் விதிமுறை தளர்த்தாததால், இன்னும் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. இருந்தாலும், வாகன ஓட்டிகள் உபயோகிக்க துவங்கி விட்டனர். இதனால், கி.மீ., கணக்கில் சுற்றிச்செல்வது தவிர்க்கப்பட்டு, போக்குவரத்து பிரச்னைக்கு விமோசனம் கிடைத்துள்ளது.அணுகுசாலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள, தமிழக அரசு, 14 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது; அப்பணியை இன்னும் மாநில நெடுஞ்சாலைத்துறை செய்யாமல் இருக்கிறது. அத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரோடு விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துதல், அணுகுசாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள், தேர்தல் நடவடிக்கை முடிந்ததும் மேற்கொள்ளப்படும். இன்னும் சில மாதங்களில், பணிகள் முழுவதும் முடிக்கப்படும்' என்றனர்.மக்களே திறந்த பாலம்!கண்ணப்பன் நகர், தயிர் இட்டேரி பகுதியில் இருந்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கும் இவ்வழித்தடம் எளிதாக இருக்கும். பணி முடிந்து இரண்டு மாதங்களானதால், பொறுமை இழந்த மக்கள், தாங்களாகவே பாலத்தை பயன்படுத்த துவங்கி விட்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X