அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:16

கடம்பத்துார்: எட்டுகுட்டிமேடு கிராமத்தில், அடிப்படை வசதிகள் இல்லாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியம், கல்லம்பேடு ஊராட்சிக்குட்பட்டது எட்டுகுட்டிமேடு கிராமம். இங்கு, 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்த கிராமத்தின் ஒரு பகுதி, திருவள்ளூர் மாவட்டத்திலும், மற்றொரு பகுதி, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வருகிறது. இவ்வாறு, இரு மாவட்டத்தின் எல்லையில் இருப்பதால், இந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த கிராமத்திற்கு செல்வதற்கு, பஸ் வசதி உட்பட வாகன வசதிகள் ஏதும் கிடையாது. பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலோ அல்லது நடந்து தான் செல்ல வேண்டும். மேலும், இந்த கிராமத்திற்கு, ஐந்தாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை, தற்போது, கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இப்பகுதி மக்கள் அடிப்படை மருத்துவ வசதிக்கு செல்வதற்கென்றால், 15 கி.மீ., துாரமுள்ள பேரம்பாக்கம் அல்லது மதுரமங்கலம் கிராமத்திற்கு தான் சென்று வரவேண்டும்.எனவே, இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும், அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரவும், சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X