மழைக்கு ஒதுங்கக்கூட முடியலீங்க! மீண்டும் நிழற்குடை அமைக்கலாமே
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:16

கோவை : மழைக்கு ஒதுங்கக்கூட இடமில்லாததால், கோவை ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் அவதிப்படுகின்றனர். அங்கு அகற்றிய நிழற்குடையை மீண்டும் அமைக்க, மாநகராட்சி முன்வர வேண்டும்.



கோவை டவுன்ஹால் மற்றும் திருச்சி ரோட்டில் இருந்து வரும் பஸ்கள், ரயில்வே ஸ்டேஷனை கடந்து, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் சென்றடைகின்றன. ரயிலில் வந்திருக்கும் பயணிகள்/ செல்லும் பயணிகள் மட்டுமின்றி, வங்கிகள், எஸ்.பி., அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு வந்து செல்ல, இந்த ஸ்டாப்பை பலரும் பயன்படுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர்.கடந்தாண்டு பருவ மழை பெய்தபோது, கலெக்டர் அலுவலகம் பகுதியில் இருந்து வழிந்தோடி வந்த நீர், லங்கா கார்னர் பாலத்தில் தேங்கி, போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. இதற்கு நிரந்தர தீர்வு காண, கலெக்டர் அலுவலகம் முதல் லங்கா கார்னர் வரை, மழை நீர் வடிகாலை மாநகராட்சி அகலப்படுத்தியது. இதற்காக, கலெக்டர் அலுவலகம் அருகில், தீயணைப்பு துறைக்கு எதிரில், ஸ்டேட் பாங்க் முன்புறம் இருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டன.வடிகால் கட்டப்பட்டதும், கலெக்டர் அலுவலகம் அருகிலும், பாங்க் முன்பும் மீண்டும் நிழற்குடை அமைக்கப்பட்டன. தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு முன் இன்னும் வைக்கவில்லை. பயணிகள் ரோட்டில் நிற்கின்றனர். மழைக்கு கூட ஒதுங்க இடமில்லாத நிலை காணப்படுகிறது.கடை வைத்திருப்பவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே வாய்தகராறு ஏற்படுகிறது. கடைகளுக்கு முன், டவுன் பஸ்களை நிறுத்தினாலும் கூட, தகராறு ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, தேவையான அளவுக்கு நிழற்குடை அமைத்து, பயணிகளுக்கு வசதி செய்து கொடுக்க, மாநகராட்சி முன்வர வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X