சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே தாமோதர பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.சிறுபாக்கம் அடுத்த எஸ்.புதுார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தாமோதர பெருமாள் கோவில் கட்டப்பட்டது. அதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைத்து, 17 ம் தேதி அதிகாலை 5:00 மணியளவில் விநாயகர் பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.பின்னர், காலை 9:50 மணியளவில் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 10:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் வீதியுலா வந்தார்.