சிதம்பரம்: உடல் நிலை சரியில்லாமல் இறந்த மூன்று பேர்களின் கண்கள், தன்னார்வ ரத்ததான கழகத்தின் சார்பில் தானமாக பெறப்பட்டது. சிதம்பரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தொலைத் தொடர்புத்துறை ஊழியர் சுதாகரன்,75; உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதே போல், பண்ருட்டியை சேர்ந்த எழில்நிலா,58; என்பவரும், புவனகிரியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மனோகரன், 75; என்பவரும் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டனர். இவர்கள் 3 பேர்களின் கண்களும், சிதம்பரம் ரத்ததான கழகத்தின் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளின் ஏற்பாட்டின் படி, தானமாக பெறப்பட்டது. அவை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்பட்டன.