| மாநில கிரிக்கெட் போட்டி: கோவை அணி முதலிடம் Dinamalar
மாநில கிரிக்கெட் போட்டி: கோவை அணி முதலிடம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:27

கடலுார்: கடலுாரில் நடந்த மாநில அளவிலான சீனியர் பிரிவு டென்னிஸ் கிரிக்கெட் போட்டியில், கோவை அணி முதலிடம் பிடித்தது. தமிழ்நாடு டென்னிஸ் கிரிக்கெட் சங்கம் சார்பில், 2வது மாநில அளவிலான சீனியர் பிரிவு டென்னிஸ் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 17ம் தேதி கடலுாரில் துவங்கியது. கடலுார், சென்னை, கன்னியாகுமரி, கோவை உட்பட 12 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. சங்க மாநில தலைவர் கோபால் மகிஜா தலைமை தாங்கினார். பொதுச் செயலர் ராமராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா, வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். அரசு பெரியார் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் குமணன் வாழ்த்திப் பேசினார். கோவை அணி முதலிடமும், கன்னியாகுமரி அணி இரண்டாமிடமும், திருவண்ணாமலை, சென்னை அணிகள் மூன்றாமிடத்தையும் பிடித்தன.விழா ஏற்பாடுகளை மாவட்ட செயலர் சந்திரமோகன் பால்ராஜ் செய்திருந்தார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X