கனிமங்கள் கடத்தல் புகார் அளிக்க மொபைல் எண்கள் டிஜிட்டல் போர்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:29

கடலுார்: புவியியல் மற்றும் சுங்கத்துறை சார்பில், கனிமங்களை கடத்துதல் தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அடங்கிய டிஜிட்டல் போர்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.அரசின் உரிய அனுமதியின்றி கனிமங்களை வெட்டி எடுத்தல், சேமித்து வைத்தல் மற்றும் கடத்துதல் தொடர்பாக, மாவட்ட அளவிலான பணிக்குழு மற்றும் வட்ட அளவிலான பணிக்குழு தலைவர்களிடம் புகார் அளிப்பது தொடர்பாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டுள்ளது.இதில், கலெக்டர் தலைமையிலான பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்ட அளவிலான பணிக்குழு தலைவர்கள், தாசில்தார்கள் அடங்கிய விவர பட்டியல் இடம் பெற்றுள்ளது.கலெக்டர் தலைமையிலான பணிக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் கலெக்டர், எஸ்.பி., மாவட்ட வன அலுவலர், டி.ஆர்.ஓ., வட்டார போக்குவரத்து அலுவலர், சப் கலெக்டர்கள் (கடலுார், சிதம்பரம், விருத்தாசலம்); டி.எஸ்.பி., க்கள், (கடலுார், சிதம்பரம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி); உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) (கடலுார், விருத்தாசலம்), உதவி இயக்குனர் பேரூராட்சி (கடலுார்); நகராட்சி ஆணையர்கள் (கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம்); மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர், கனிமம் துணை இயக்குனர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோரது அலுவலக தொலை பேசி மற்றும் மொபைல் போன் எண்கள் இடம் பெற்றுள்ளன. அதே போல், கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி தாசில்தார்களின் அலுவலக மற்றும் மொபைல் எண்கள் இடம் பெற்றுள்ளன.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X