பறிமுதல் செய்யப்படும் மணலை அரசு திட்டங்களுக்கு வழங்க கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:30

விருத்தாச்சலம்: தாலுகா அலுவலகங்கள், போலீஸ் நிலையங்களில் பறிமுதல் செய்து, குவித்து வைக்கப்பட்டுள்ள மணலை அரசு திட்டங்களுக்கு வழங்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆறுகளில் அதிகமாக மணல் சுரண்டுவதால், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பாலாறு, தென்பெண்ணையாறு, மணிமுக்தாறு, வைகை, வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் செயல்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டன.ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீட்டு கனவு, பிரதமர் வீட்டு வசதி உள்ளிட்ட அரசு திட்டங்கள் மற்றும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, மாட்டு வண்டி குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் உள்ளிட்ட பல இடங்களில் மாட்டு வண்டி குவாரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனாலும், இரவு நேரங்களில் லாரி, மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவது தொடர் கதையாக உள்ளது.ஆறுகளில் அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்லப்படும் மணல் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால், மாவட்டத்தில் விருத்தாசலம், மங்களம்பேட்டை, கடலுார், குறிஞ்சிப்பாடி, ரெட்டிச்சாவடி, பண்ருட்டி, புதுப்பேட்டை, திட்டக்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்கள், தாலுகா அலுவலகங்களில் மணல் ஏராளமாக குவிந்து கிடக்கிறது.இவ்வாறு குவியும் மணல் சில இடங்களில் திடீரென காணாமல் போகின்றன. இவற்றை அரசு கட்டுமானங்களுக்கும், அரசு வீடு கட்டும் திட்டங்களுக்கும் வழங்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.வருவாய் மற்றும் போலீசார் பறிமுதல் செய்யும் மணலை பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைத்து, அரசு திட்டங்களுக்கு வழங்க சட்ட விதிகள் உள்ளன.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X