| தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் அவதி Dinamalar
தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:32

நடுவீரப்பட்டு: பாலுார் சன்னியாசிப்பேட்டை பழைய காலனியில் தண்ணீர் பிரச்னையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.பாலுார் அடுத்த சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் பழையகாலனிக்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருந்தது. இந்த போர்வெல்லில் நீர் மட்டம் குறைந்ததால், தண்ணீர் கிடைக்காமல், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.இந்த பகுதியில் உள்ள மினிபவர் பம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதடைந்தது. இந்த மினிபவர் பம்ப்பில் இருந்த டேங்கில் டெங்கு கொசு இருப்பதாக கூறி, டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் டேங்கை எடுத்து சென்று விட்டனர்.இந்த மினிபவர் பம்ப்பின் மோட்டாரை சரி செய்ய அண்ணாகிராம ஒன்றிய அதிகாரிகளிடம் கூறினால் 'இதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை' என கூறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். ஆகையால் அண்ணாகிராம ஒன்றிய அதிகாரிகள் தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X