பண்ருட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!... ஏரிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தேவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:34

பண்ருட்டி: பண்ருட்டி பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால நவடிக்கை எடுக்க வேண்டும்.


பண்ருட்டி நகரத்தையொட்டி வடக்கு, தெற்கு இருபுறமும் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, தென்பெண்ணையின் துணை ஆறாக மலட்டாறும் உள்ளது. தென்பெண்ணையாறு, கெடிலம் ஆற்றில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக விதிமுறை மீறி மணல் அள்ளியதால், இரு ஆற்றிலும் மணல் இல்லை. களிமண் தரையாக மாறியுள்ளது.


நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தில் 2,500 அடி ஆழத்திற்கும் கீழ் நிலக்கரி வெட்டி எடுப்பதால், நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு ஆண்டும் குறைகிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், தனி நபர் வீடுகளில் 20-50 அடி வரையிலும், விவசாயத்திற்கு 100 அடி முதல் 120 அடி வரையிலும் தண்ணீர் கிடைத்தது.நிலத்தடி நீர் சேமிக்க எவ்வித முயற்சியும் எடுக்காததால் தற்போது பண்ருட்டி நகரத்தில் 120 அடிக்கு கீழும், பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, திருவாமூர், வீரப்பெருமாநல்லுார், சிறுகிராமம், குடுமியான்குப்பம், கொளப்பாக்கம், ஏரிப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் 300 அடிக்கு கீழ் கூட தண்ணீர் வளம் இல்லை. 600 அடிக்கு சென்றால் கூட, சில இடங்களில் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. இதனால் ஊராட்சிகளில் ஏற்கனவே இயங்கி வரும் போர்வெல் மூலமே குடிநீர் வழங்கி தண்ணீர் பிரச்னையை தீர்த்து வருகின்றனர்.


இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு பின் அனைத்து கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு செல்லும் நிலை உள்ளது. நீர் மட்டம் அபாய கட்டத்திற்கு சென்றதற்கு ஆறு, குளங்களை பராமரிக்காததும் காரணம். பொதுப்பணித்துறை பராமரிப்பில் தென்பெண்ணையாறு, மலட்டாறு, கெடிலம் ஆறு மற்றும் 28 ஏரிகளும் உள்ளன.ஒன்றியம் சார்பில் சில ஏரிகளும், குளங்களும் உள்ளன. 28 ஏரிகளில் ,24 ஏரிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. 434 ஹெக்டர் பரப்பளவு கொண்ட பண்ருட்டி நகரத்தில் உள்ள செட்டிப்பட்டறை ஏரியில் 80 சதவீதம் ஆக்கிரமிப்பில் உள்ளது.


இந்த ஏரியின் ஆக்கிரமிப்பு அகற்ற, கடந்த ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது. கண்துடைப்பிற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஏரியை துார்வாரவில்லை. ஏரியை அளந்து கல் பதிக்காமல் விட்டு விட்டதால் பொதுப்பணித்துறையினருக்கே எதுவரை எல்லை உள்ளது என தெரியவில்லை.


தற்போது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தென்பெண்ணையாற்றில் இருந்து, சிறுகிராமம், திருவாமூர், கொளப்பாக்கம், சேமக்கோட்டை, வீரப்பெருமாநல்லுார் கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமே பிரச்னைக்கு தீர்வல்ல.நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் தடுக்க, நீர் மேலாண்மை, நீர் சேகரிப்பு, நீர் பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க இயலும். இப்பிரச்னையில் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொள்ள வேண்டும். தொலை நோக்குத்திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க முடியும். இல்லையெனில், தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதை தடுக்க இயலாது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X