| ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா Dinamalar
ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:35

மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழாவில், ஏராளமானோர் வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் சுயம்பு ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா கடந்த 11ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு அபிேஷக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.கடந்த 17ம் தேதி இரவு 7:30 மணிக்கு ஆதிகேசவ பெருமாள், வேதவள்ளி நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று (19 ம் தேதி) காலை 6:00 மணியளவில், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தேர் வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (20ம் தேதி) இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X