| டிக்கெட் வழங்கும் கருவி 'மக்கர்' அவதிப்பட்ட ரயில்வே பயணிகள் Dinamalar
டிக்கெட் வழங்கும் கருவி 'மக்கர்' அவதிப்பட்ட ரயில்வே பயணிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:37

கோவை : கோவை ரயில்வே ஸ்டேஷனில், தானியங்கி டிக்கெட் வழங்கும் கருவி நேற்று 'மக்கர்' செய்தது. ஊழியர்களும் பணியில் இல்லாததால், பயணிகள் அவதிப்பட்டனர்.



கோவை ரயில்வே ஸ்டேஷனை, தினமும் கடந்துசெல்லும், 72 ரயில்களில், 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர். டிக்கெட் கவுன்டர்களில், பயணிகள் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக, ஸ்டேஷன் பிரதான நுழைவாயிலில் இரண்டு, கூட்ஷெட் ரோட்டை ஒட்டிய பின்புற நுழைவாயிலில் ஒன்று என, மூன்று தானியங்கி டிக்கெட் வழங்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.



ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை கொண்டு, இக்கருவிகள் இயக்கப்பட்டு வருகின்றன. கருவிகள் பொருத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளான நிலையில், பிரதான நுழைவாயிலில் இருக்கும் கருவிகள் அடிக்கடி செயல்படுவதில்லை. இவற்றை இயக்கும் ஊழியர்களும் சில சமயத்தில் பணியில் இல்லாததால், பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.நேற்று, பிரதான நுழைவாயிலில் இருக்கும் முதல் கருவி செயல்படாததுடன், இரண்டாவது கருவியில் ஊழியர் இல்லாததால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஞாயிறு விடுமுறை என்பதுடன், 'பீக் ஹவர்ஸ்' என்பதால், டிக்கெட் கவுன்டர்களிலும் கூட்டம் அலைமோதியது.



ஸ்டேஷன் அதிகாரிகள் கூறுகையில், 'இணையதள பிரச்னை காரணமாக, சில சமயங்களில் இக்கருவிகள் செயல்படுவதில்லை. நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X