| இந்த வாரம்... ஆரவாரம்! Dinamalar
இந்த வாரம்... ஆரவாரம்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:38

மே 20: பிரம்ம சூத்திரம்அண்டம் கடந்த மிகப்பெரும் உண்மைகளை அணுவில் வழங்குவது பிரம்ம சூத்திரத்தின் தனித்துவம். 'ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன்' சார்பில், பிரம்ம சூத்திரம் குறித்த சொற்பொழிவு, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.104, மூன்றாவது வீதி, டாடாபாத். 94873 73635

மே 20: திறன் மேம்பாட்டு பயிற்சிஒவ்வொரு பணியாளரின் தனித்துவ திறனும் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியமானது. எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லுாரி சார்பில், 'திறன்மிகு வேலை கலாசாரம்' என்ற தலைப்பில், காலை, 10:00 மணிக்கு, திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடக்கிறது.எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லுாரி, சத்தி மெயின் ரோடு. 0422 - 266 8604

மே 21: திருஞான சம்பந்தர் குருபூஜைசைவநெறி தழைத்தோங்க பாடுபட்ட தேவார மூவரில், திருஞான சம்பந்தர் தெய்வருளால் இளம் வயதிலே பாடி புகழ் பெற்றவர். வேல்முருகன் கோவிலில், மூல நட்சத்திரத்தில் திருஞான சம்பந்தர் குரு பூஜை விழா நடக்கிறது. அபிஷேக பூஜை: காலை, 10:00 மணிக்கு, அலங்கார பூஜை: காலை, 11:00 மணிக்கு, பிரசாதம், மதியம் 12:00 மணிக்கு வழங்கப்படுகிறது.பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம். 99443 70153

மே 23: ஞான வேள்வி'பாரதிய வித்யா பவன்' சார்பில், வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் உபன்யாசம் நடக்கிறது. வரும், மே, 27 வரை நடக்கும் இச்சொற்பொழிவில், ரிஷிகள், ஆழ்வார்கள் கண்ணோட்டத்தில் வராஹ, நரசிம்ஹ, வாமன, ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்கள் குறித்து, தினமும் மாலை, 6:30 மணிக்கு பேசுகிறார். நாளை முதல், 27 வரை, ஸ்ரீவேதாந்த தேசிகனின் ஸூபாஷிதநீவி என்ற தலைப்பில் சொற்பொழிவு, தினமும் காலை, 7:00 மணிக்கு நடக்கிறது.பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம். 0422 - 254 2481

மே 25: வேலைவாய்ப்பு முகாம்ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனம் சார்பில், முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மெகா வேலை வாய்ப்பு முகாம், எட்டிமடையில் நடக்கிறது. காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் அம்முகாமில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலை தேடும் பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம்.எட்டிமடை. 93888 68558

மே 25: பறை பயிற்சிசமூகத்துக்கான விடுதலை மட்டுமல்ல, தனிமனித விடுதலையும் பறை இசையால் சுவாசிக்க முடியும். 'நிமிர்வு கலையகம்' சார்பில், இரு நாள் பறை பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. பங்கேற்க விரும்புபவர்கள், முன்பதிவு செய்துகொள்ளலாம்.தமிழ் கல்லுாரி, பேரூர். 95784 43795

மே 25: கேக் தயாரிக்கலாம்கொண்டாட்டங்களை இனிக்கச் செய்யும் கேக்குகளை, வண்ண அலங்காரங்களில், புது வடிவங்களில் வீட்டிலேயே செய்து கொடுத்தால், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோர் மனதிலும் தனி இடம் பிடித்து விடலாம். 'கேக் மை டே' சார்பில், கேக் தயாரிப்பு பயிலரங்கு, காலை, 10:30 மணி முதல் நடக்கிறது. முன்பதிவு செய்வது அவசியம்.கேக் மை டே, ராமலிங்கா நகர், சாய்பாபா காலனி.95667 18113

மே 25: இயற்கை 'சோப்பு' செய்யலாம்இணையத்தில் தேடினால், இயற்கையின் பலன் கிடைக்குமா? ரசாயணங்களுக்கு எதிரான முதல் முயற்சியை, குடும்ப நலத்துக்காக, இன்றே துவக்குங்கள். இயற்கை மூலப்பொருட்கள் மூலம் வீட்டிலேயே இயற்கை சோப்பு தயாரிப்பது குறித்த பயிலரங்கு, காலை, 11:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது.ஆர்.எஸ்.புரம். 94428 34000

மே 26: பகவத்கீதைசெயல்புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் துணை இருக்காது என போதிக்கும் பகவத்கீதை, மனித வாழ்வை ஆராதித்து வாழ்வதற்கான அறநெறிகளை கூறுகிறது. 'ஸ்ரீசாய் துவாரகா டிரஸ்ட்' சார்பில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை: 6:00 மணிக்கு நடக்கிறது.பாரதி காலனி, பீளமேடு. 0422 - 4218346

மே 26: கலை கற்போம்சிறிய முதலீட்டில் சுயதொழில் துவங்குவோருக்கு, சுரக்குடுவை கலைப்பொருட்கள் நிச்சயம் கைகொடுக்கும். புனித ஜான் மெட்ரிக் பள்ளியில் சுரைக்குடுவை கலைப்பொருட்கள் குறித்த செயல்முறை பயிலகம், காலை,9:00 மணிக்கு நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.21-ஏ சக்தி நகர், பிரஸ் காலனி, மேட்டுப்பாளையம் ரோடு.95001 25125

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X