வேப்பூர்: வேப்பூர் அடுத்த நல்லூர் பாலாஜி மேல்நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.பானுமதி அம்மாள் கல்வி அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.முகாமிற்கு, பள்ளியின் நிறுவனர் அறிவானந்தன் தலைமை தாங்கினார். தாளாளர் அன்புக்குமரன், ஆசிரியர் ஷீலா முன்னிலை வகித்தனர். சுற்றுப்புற கிராம மக்கள் 200 பேர் பங்கேற்றனர்.மருத்துவர் சசிரேகா தலைமையிலான குழுவினர், கண் புரை நீக்குதல், நீர் அழுத்தம், சீழ் வடிதல், கருவிழி புண், ஒற்றை மற்றும் தொடர்ச்சியான தலைவலி குறித்து பரிசோதனை செய்தனர். 20 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.