கோவை : கோவை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தை அசுத்தம் செய்த குற்றத்துக்காக, 360 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகளில் சிலர், ஸ்டேஷன் வளாகத்தை அசுத்தப்படுத்தி விடுகின்றனர். பொது இடங்களை அசுத்தம் செய்தால், ரயில்வே நிர்வாகம் அபராதம் வசூலிக்கிறது.
கடந்த ஜன., முதல் இதுவரை, எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், குப்பை கொட்டுதல் உள்ளிட்ட அசுத்த செயல்களுக்காக, 360 பேரிடம் அபராதம் வசூலித்துள்ளது. இதுவரை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.இதேபோல், ரயில் டிக்கெட் மற்றும் 'பிளாட்பார்ம்' டிக்கெட் எடுக்காத, 1,700 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில், 5.50 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.