| காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் Dinamalar
காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:40

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த வி.சாத்தமங்கலம் காலனியில், புதியதாக ஆழ்துளை கிணறு அமைக்க கோரி, மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் முன், பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.கம்மாபுரம் ஒன்றியம், வி.சாத்தமங்கலம் காலனியில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.கடந்த பிப்ரவரி மாதம் போர்வெலின் நீர் இல்லாமல் போனது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, கிராம மக்கள், பாசன மோட்டார்களை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது.இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 11:30 மணியளவில், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் காலி குடங்களை கவிழ்த்து வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.தகவலறிந்த ஊ.மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார். புதிய போர்வெல் அமைக்க ஒன்றிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X