டிரைவரை தாக்கிய 4 பேருக்கு வலை | கடலூர் செய்திகள் | Dinamalar
டிரைவரை தாக்கிய 4 பேருக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:40

விருத்தாசலம்: அரசு பஸ்சை மறித்து, டிரைவர், கண்டக்டரை தாக்கிய நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலத்தில் இருந்து கொடுக்கூர் சென்ற அரசு டவுன் பஸ்சில், முடப்பள்ளியை சேர்ந்த சிவநாதன், 48; டிரைவராகவும், ஆலடி இளையகுமார், 31, நடத்துனராகவும் பணியில் இருந்தனர். நேற்று முன்தினம் மதியம், கடைவீதி நான்குமுனை சந்திப்பு அருகே சென்றபோது, பஸ்சின் முன்புறம் பைக்கை மர்ம நபர் நிறுத்தினார். தன் மீது உரசுவது போல பஸ் சென்றதாக தகராறு செய்தார். அவருடன் மேலும் 3 பேர் சேர்ந்து சிவநாதன், இளையகுமார் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பியோடினர்.விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். விசாரணையில், விருத்தாசலம் தீர்த்தமண்டப தெருவை சேர்ந்த விநாயகமூர்த்தி மற்றும் அடையாளம் தெரிந்த மூன்று பேர் சேர்ந்து, அரசு பஸ் ஊழியர்களை தாக்கிவிட்டு தலைமறைவானது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இந்நிலையில், பாட்டாளி தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று பகல் 12:00 மணியளவில் பணிமனை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீத் மற்றும் பணிமனை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், பேச்சுவர்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். நேற்று இரவு விநாயகமூர்த்தி, 40, கைது செய்யப்பட்டார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X