பஸ்- லாரி உரசல்; மூதாட்டி காயம் | கடலூர் செய்திகள் | Dinamalar
பஸ்- லாரி உரசல்; மூதாட்டி காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:41

திட்டக்குடி: திட்டக்குடியில் பஸ்,லாரி உரசிக்கொண்டதில், பஸ்சில் பயணம் செய்த மூதாட்டி காயமடைந்தார்.திட்டக்குடி அடுத்த ஆவட்டியை சேர்ந்தவர் கோபால் மனைவி சின்னபொண்ணு,60. இவர் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அரசு பஸ்சில் திட்டக்குடிக்கு வந்தார். பஸ்சை பழனி ஓட்டி வந்தார்.திட்டக்குடி பஸ்நிலையம் அருகே வளைவில் பஸ் திரும்பிய போது, அங்கு நின்று கொண்டிருந்த லாரியுடன் பஸ் உரசியது. இதில் பஸ்சின் ஓரத்தில் அமர்ந்திருந்த சின்னபொண்ணு கையில் காயமடைந்தார். அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X