கடலுார்: மொபைல் போனை தண்ணீரில் போட்டதால் ஏற்பட்ட தகராறில் பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் துறைமுகம் தைக்கால் தோணித்துறையை சேர்ந்தவர் முருகன் மகன் மணிமாறன்,30. இவர் கடந்த 17ம் தேதி தைக்கால் தோணித்துறை உப்பனாற்று பகுதி அருகே மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகாலிங்கம், மொபைல் போனை பறித்து தண்ணீரில் போட்டுள்ளார்.இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடன் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மாறுநாள் காலை மணிமாறன், மகாலிங்கம் வீட்டிற்கு சென்று புதிய மோபைல் போன் வாங்கித்தரவேண்டும் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரடைந்த மகாலிங்கம், இவரது மகன் யோகேஷ்வரன், தாய் சரஸ்வதி ஆகியோர் சேர்ந்து மணிமாறனை இரும்பு பைப்பால் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டினர். படுகாயமடைந்த மணிமாறன் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்த புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து சரஸ்வதியை, 62; கைது செய்தனர். மகாலிங்கம், யோகேஷ்வரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.