போத்தனுார் : சுந்தராபுரம் அருகே திருட்டுபோன சரக்கு ஆட்டோ, காரைக்குடியில் மீட்கப்பட்டது.சுந்தராபுரம் அருகே சாரதா மில் ரோடு, கமலா நகரில் வசிப்பவர் மணிகண்டன். இரு நாட்களுக்கு முன், இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த சரக்கு ஆட்டோ திருட்டு போனது. போத்தனுார் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், காரைக்குடியில் இவரது ஆட்டோ போலீஸ் சோதனையில் சிக்கியது. தகவலறிந்த தனிப்படை போலீசார், அங்கு சென்று ஆட்டோவை கோவைக்கு கொண்டு வந்தனர்.