| கணவர் கண்ணெதிரே மனைவி பரிதாப பலி Dinamalar
கணவர் கண்ணெதிரே மனைவி பரிதாப பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:43

விருத்தாசலம்: பைக்கில் சென்ற தம்பதி மீது லாரி மோதியதில், கணவன் கண்ணெதிரே மனைவி தலை நசுங்கி இறந்தார்.விருத்தாசலம் அடுத்த தே.புடையூரை சேர்ந்தவர் செல்வராஜ், 55. திட்டக்குடி அரசு பணிமனையில் நடத்துனராக பணிபுரிகிறார். இவரது மனைவி செல்வராணி, 50. இருவரும் நேற்று பிற்பகல் 12:00 மணியளவில், (டிஎன் 91 எக்ஸ் 6082) ேஹாண்டா பைக்கில், விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் சென்றனர்.அப்போது, அவ்வழியே சென்ற (டி என் 32 டி 1015) பதிவெண் கொண்ட டாரஸ் லாரி, பைக் மீது மோதியது. நிலைதடுமாறி கீழே விழுந்த செல்வராணி மீது லாரி ஏறியது. கணவர் கண்ணெதிரே தலைநசுங்கி செல்வராணி பரிதாபமாக இறந்தார்.விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X