கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் பகலிலும் மின் விளக்கு எரிகிறது.கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். போலீஸ் குடியிருப்பும் இங்குதான் உள்ளது.இப்பகுதி மக்கள், இரவு நேரங்களில் அச்சமின்றி செல்வதற்கு, தெரு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மட்டுமே எரிந்த இந்த தெரு மின் விளக்குகள் கடந்த சில தினங்களாக பகலிலும் எரிகிறது.இது குறித்து, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் தெரு மின் விளக்குகளை நிறுத்துவதற்கு யாரும் முன் வரவில்லை.தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்று அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால், மின்துறை அதிகாரிகள், அதை பின்பற்றுவதில்லை.கள்ளக்குறிச்சி பகுதியில் பகலில் எரியும் மின்விளக்குகளை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.எனவே, பகலில் எரியும் மின் விளக்குகளை நிறுத்துவதற்கு மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.