| தீக் குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு Dinamalar
தீக் குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:49

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே குடும்ப தகராறில் தீக் குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.சங்கராபுரம் வட்டம், வடசெட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி மகன் மஞ்சுநாதன், 39; விவசாயி. இவருக்கு சாந்தி,35, என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.கடந்த 16ம் தேதி கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையில், விரக்தியடைந்த மஞ்சுநாதன், தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.பலத்த காயமடைந்த மஞ்சுநாதனை புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X