விழுப்புரம்: விழுப்புரத்தில் மாயமான இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலுார், கண்ணாரம்பட்டு சேர்ந்த ராஜலிங்கம் மகள் சங்கீதா, 22; திட்டக்குடி தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் வி.மருதுாரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சங்கீதா சென்றுள்ளார். கடந்த 16ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, சங்கீதாவை தேடி வருகின்றனர்.