மருதமலையில் டிக்கெட் மோசடி? கோவில் பணியாளர் மீது புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:50

வடவள்ளி : மருதமலை கோவிலில், பக்தர்களிடம் பணம் வசூலித்துவிட்டு, டிக்கெட் கொடுக்காமல், பணியாளர் ஏமாற்றியதாக, அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, விசாரணை நடக்கிறது.



மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சில நாட்களுக்கு முன், கர்நாடகாவில் இருந்து, 35 பக்தர்கள் வந்திருந்தனர். சிறப்பு வழி தரிசனத்துக்கு டிக்கெட் கேட்டுள்ளனர். ஒரு நபருக்கு, 20 ரூபாய் வீதம், 700 ரூபாய் செலுத்தியுள்ளனர்.



கவுன்டரில் இருந்த கோவில் பணியாளர் அழகுவள்ளி, 35 பேருக்கு உரிய கட்டணத்தை வசூலித்துள்ளார். ஆனால், டிக்கெட் வழங்காமல், சுவாமி தரிசனத்துக்கு அனுப்பியுள்ளார். அங்கு சிறிது நேரம் கூட தரிசனம் செய்ய முடியாமல், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுதொடர்பாக, கர்நாடகாவில் இருந்து வந்த பக்தர்கள், கோவில் நிர்வாக அலுவலகத்தில், அழகுவள்ளி மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.



இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) மேனகாவிடம் கேட்டபோது, ''பக்தர்கள் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை முடிந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X