| மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் Dinamalar
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:53

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டுமான பணிகள் நிறைவுபெற்று திறப்புவிழாவுக்கு தயாராக உள்ளது.கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கடந்த 2012ம் ஜூன் மாதம் துவங்கப்பட்டது. நீலமங்கலம் பைபாஸ் சாலையின் அருகே தனியார் வாடகை கட்டடத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. அவ்விடத்தில் லைசென்ஸ் வழங்குவதற்கான சோதனை தளமோ, பதிவுக்கு வரும் வாகனங்கள் நிற்பதற்கோ இடம் இல்லாதததால் நீலமங்கலம்-நிறைமதி சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டு சோதனை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், வாடகை கட்டடத்தில் இயங்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திலும் போதிய இடம் இல்லாததால் நெருக்கடி ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக சொந்த கட்டடத்திற்கு பெருவங்கூர் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த பிப்., மாதம் கட்டுமான பணிகள் துவங்கியது.ஒரு கோடியே 69 லட்சம் மதிப்பில் பொதுப்பணித் துறையினர் (கட்டடப்பிரிவு) மேற்பார்வையில் பணி நடந்தது. மொபட், கார், வேன், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுனர் உரிமம் வழங்க ஏதுவாக டெஸ்டிங் டிராக் மற்றும் புதிய பதிவுகளுக்கு வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்தது.பணிகள் நிறைவுறும் நிலையை எட்டியதையொட்டி, விரைவில் திறப்பு விழா காண தயாராக உள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X