| லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை Dinamalar
லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:55

விழுப்புரம்: விழுப்புரம் (தனி) மற்றும் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கைகள், விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியிலும், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியிலும் நடக்கிறது.வரும் 23 ம் தேதி ஓட்டு எண்ணிக்கையொட்டி, ஓட்டு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய போலீஸ் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக நேற்று மாவட்டத்திற்குட்பட்ட காவல் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி, 'ஓட்டு எண்ணும் மையத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவது. பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது.காவல் நிலையங்களில் உள்ள வழக்குகளின் கோப்புகளை விரைந்து முடிப்பது, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றசம்பவங்களை தடுக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கினார்.கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., முகிலன், டி.எஸ்.பி.,க்கள் விழுப்புரம் திருமால், உளுந்துார்பேட்டை பாலசந்தர், கள்ளக்குறிச்சி ராமநாதன், திருக்கோவிலுார் மகேஷ், திண்டிவனம் கனகேஸ்வரி, கோட்டக்குப்பம் அஜய்தங்கம், தனி பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உட்பட இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பலர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X