பஸ் நிலையத்தில் ஆபத்தான பள்ளம், வாகன ஓட்டிகள், பயணிகள் அச்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:56

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் ஆபத்தான கழிவு நீர் கால்வாய் பள்ளத்தால் வாகன ஒட்டிகள் மற்றும் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்ளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.விழுப்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பஸ் நிலைய வளாகத்திற்குள் பல்வேறு இடங்களில் செல்லும் கழிவு நீர் கால்வாய் பகுதிகளில் சிமெண்ட் சிலாப் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவு நீர் கால்வாய் சிலாப் கட்டைகள் பல இடங்களில் முற்றிலும் உடைந்து காணப்படுகிறது. கடலுார் பஸ்கள் நிற்கும் இடம் மற்றும் டவுன் பஸ்கள் செல்லும் வழியில் அரசு மற்றும் தனியார் பஸ் வாகன ஒட்டிகளை அச்சுருத்தும் வகையில் சிலாப் கட்டை உடைந்து 'மெகா சைஸ்' பள்ளமாக காட்சியளிக்கிறது.இப்பள்ளங்களால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அச்சமடைந்து வருகின்றனர். சிலாப் கட்டை உடைந்துள்ள இடத்தில் நடந்து செல்லும் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கான்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டியபடி நிற்கிறது.இதனால், இரவு நேரங்களில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக சேதமடைந்துள்ள சிலாப்களை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளை அச்சுறுத்தி வரும் கழிவு நீர் கால்வாய் பள்ளத்தை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X