செஞ்சி கோட்டையில் கிரானைட் அறிவிப்பு பலகை சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:56

செஞ்சி: செஞ்சிக்கோட்டையில் புதிதாக கிரானைட் கற்களில் குறிப்புகளுடன் அறிவிப்பு பலகைகளை வைத்திருப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.தென் இந்தியா பகுதியில் முழு அமைப்பும் உள்ள ஒரே கோட்டையாக செஞ்சி கோட்டை உள்ளது. நம் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் செஞ்சிக்கோட்டையை காண தவறுவதில்லை.இதனால் செஞ்சிக்கோட்டையை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் முயற்சியில் இந்திய தொல்லியல் துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். அத்துடன் யுனஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.இதற்கு ஏற்ப செஞ்சிக்கோட்டையை சர்வதேச நினைவு சின்னங்களுக்கு ஏற்றாற்போல் தரம் உயர்த்தும் வகையில் கட்டமைப்புகளை நிர்மாணித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இதற்கு முன்பு இருந்த வழிகாட்டி பலகை, அறிவிப்பு பலகைகளுக்கு பதில், தற்போது கிரானைட் கற்களால் அமைத்துள்ளனர். கிரானைட் கல்துாணில் இணைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்பலகையில் ஸ்டில் பிளேட்டில் அறிவிப்புகளை பொருத்தி உள்ளனர்.இதற்கு முன்பு அறிவிப்பு பலகையில் இடத்தின் பெயரை மட்டும் குறிப்பிட்டு இருந்தனர். தற்போது அந்த இடத்தின் சிறப்பையும், அது எப்போது யாரால் கட்டப்பட்டது என்ற சிறு குறிப்பையும் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் குறிப்பிட்டுள்ளனர்.இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றவர் உதவியின்றி இந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்ள முடியும். இந்த அறிப்பு பலகைகள் சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.இது மட்டுமின்றி கோட்டையில் வைத்துள்ள வழிகாட்டி பலகை, சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்கும் சிறிய பெஞ்சு, குப்பை தொட்டிகள் ஆகியவற்றையும் கிரானைட் கற்களால் அமைத்துள்ளனர்.700 ஆண்டுகள் பழமையான செஞ்சி கோட்டையில் தற்போது வைத்துள்ள அறிவிப்பு பலகைகளும் பழமையான முறையில் இருப்பது கோட்டையின் பொலிவை மேலும் கூட்டி உள்ளது. சுற்றுலா பயணிகளிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X