| மணல் கடத்திய வாலிபர் கைது Dinamalar
மணல் கடத்திய வாலிபர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:57

அவலுார்பேட்டை: வளத்தி அருகே மணல் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்தனர்.வளத்தி அடுத்த செவலபுரை கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி மகன் அப்பாசாமி, 39. இவர் அதே ஊரிலுள்ள சங்கராபரணி ஆற்று கரையோரத்தில் நேற்று முன்தினம் காலையில் டிராக்டர் டிப்பரில் (டிஎன்-54 இஸட் 7176, டி1, 745 ) மணல் கடத்தி சென்றார்.அப்போது வளத்தி சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைசெல்வன் மற்றும் போலீசார், மணல் கடத்தி சென்ற டிராக்டரை மடக்கி பிடித்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அப்பாசாமியை கைது செய்து, டிராக்டர், டிப்பர் மற்றும் 1 யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X