திண்டிவனம்: 'தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்' என வி.சி.,கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.திண்டிவனத்தில் நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:பா.ஜ., தேசிய அளவில் 300 இடங்களுக்கு மேலாக தனிபெரும்பான்மை பெற்று, ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. பொதுவாக தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டுவதில்லை. பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெறவும், ஆட்சி அமைக்கவும் வாய்ப்பில்லை. இந்திய அளவில் ஆட்சி மாற்றம் நிகழும். தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். காந்தியடிகள் குறித்து நான் கூறிய கருத்து, சர்ச்சையான கருத்து என்று ஊதி பெரிதாக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.