| சாலையில் ஆறாக ஓடும் கழிவு நீர் ரெட்டியார்பாளையத்தில் மக்கள் அவதி Dinamalar
சாலையில் ஆறாக ஓடும் கழிவு நீர் ரெட்டியார்பாளையத்தில் மக்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
02:17

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவு நீர் சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து வௌியேறும் கழிவு நீர் வடிகால் வழியாக செல்கிறது. இந்த வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் ஓட வழயின்றி வாய்க்கால் நிரம்பி சாலையில் ஆறாக ஓடுகிறது.இப்பகுதி மக்கள் தட்சணாமூர்த்தி நகர், ஜெயா நகர், மூலகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது.ஆகையால், ரெட்டியார்பாளையம் புதுநகரில் வடிகால் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க, சாலையை சுத்தம் செய்திட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X