| ஜிப்மரில் நிரம்பி வழியும் நோயாளிகள் கூட்டம் அவசர சிகிச்சை பிரிவு விரிவுபடுத்தப்படுமா? Dinamalar
ஜிப்மரில் நிரம்பி வழியும் நோயாளிகள் கூட்டம் அவசர சிகிச்சை பிரிவு விரிவுபடுத்தப்படுமா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
02:18

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இடவசதியின்றி டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.தென் இந்தியாவில் விரல்விட்டு எண்ணும் தலை சிறந்த மருத்துவமனைகளில் ஜிப்மர் மருத்துவமனையும் ஒன்று. தரமான சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்பதால், தமிழகம் மட்டும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக ஜிப்மர் வருகின்றனர். இதனால் ஜிப்மருக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த ஆண்டில் 23.63 லட்சம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். தினசரி 7,958 பேர் புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் 2.52 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். சராசரியாக தினசரி 689 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.தற்போது அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, ஆக்ஸிஜன் அளிப்பதுடன், ரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக கண்காணிப்பதுடன், சிலருக்கு வெண்டிலேட்டர் வசதியும் செய்ய வேண்டும்.அவசர சிகிச்சை பிரிவில் இடவசதி குறைவாக இருப்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிரமமாக உள்ளது. ஆதலால், அவசர சிகிச்சை பிரிவை விரிவுப்படுத்த ஜிப்மர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X