புதுச்சேரி அருங்காட்சியகத்தில் பன்னாட்டு அருங்காட்சியக நாள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
02:19

புதுச்சேரி: புதுச்சேரி அருங்காட்சியகத்தில், உலக அருங்காட்சியக நாளையொட்டி, தாழி அறக்கட்டளை மற்றும் தேசிய மரபு அறக்கட்டளை சார்பில் பன்னாட்டு அருங்காட்சியக நாள் விழா மற்றும் வரலாற்று கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி அருங்காட்சியக நிறுவனர் அறிவன் தலைமை தாங்கி, இந்திய அருங்காட்சியக தந்தை, ஆனந்தகுமாரசுவாமி உருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தி, அவரது வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். கல்வெட்டு ஆய்வாளர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார்.ஒவ்வோர் ஆண்டும் பன்னாட்டு கூட்டமைப்பு உலக அருங்காட்சியக நாளினைக் கொண்டாடி வருகின்றது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டுக்கான திட்டக் கருவினையும் உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு, 'அருங்காட்சியகங்கள் நமது பண்பாட்டு நடுவங்கள் - அவை நமது மரபுகான எதிர்காலங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில், புதுச்சேரியின் வரலாற்றினை உலக அளவில் கொண்டு சேர்க்க அரும்பாடுபட்டு வரும், புதுச்சேரி அருங்காட்சியகம், அருகாமையில் உள்ள விழுப்புரம், கடலுார் பகுதிகளில் உள்ள வரலாற்றுச் செய்திகளையும், சிறப்புகள் குறித்து பேசப்பட்டது. பிரிட்டிஷ் ஆதிக்க ஆட்சியில் இந்திய அளவில் பரிசு வாங்கிய கடலுார் அருங்காட்சியகம், அதன் இன்றைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் சர்வதேச நகரான ஆரோவில்லில் நாற்பதாண்டு அகழாய்வுகள் செய்தியினையும், அந்த அகழாய்வில் 20 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றிய கோபி, தன் அனுபவங்களை அனைவருடன் பகிர்ந்து கொண்டார்.கலந்துரையாடலில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்ட வரலாற்று ஆர்வலர்கள், மொழி ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதுச்சேரி அருங்காட்சியக ஒருங்கிணைப்பாளர் மனோரஞ்சனி செய்திருந்தார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X