| குருவிநத்தம் தூக்குபாலத்தில் தார் சாலை அமைக்க கோரிக்கை Dinamalar
குருவிநத்தம் தூக்குபாலத்தில் தார் சாலை அமைக்க கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
02:20

பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட துாக்கு பாலத்தில் தார் சாலை அமைத்து, விபத்துக்களை தடுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் துாக்குப் பாலம் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, விழுப்புரத்தில் இருந்து கடலுார் செல்லக்கூடிய வாகனங்கள், திருபுவனை, பாக்கம் கூட்ரோடு, குருவிநத்தம் வழியாக கடலுாருக்கு செல்கின்றன. இதேபோல், கடலுாரில் இருந்து செல்லும் வாகனங்கள் இந்த வழியாக விழுப்புரத்திற்கு செல்கின்றன.குருவிநத்தம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள துாக்குப் பாலம் குறுகலாக வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. இந்த பாலத்தை விரிவாக்கம் செய்ய, கடந்த 2015ம் ஆண்டு, 13 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின், ஒன்றரை ஆண்டுகள் கழித்து பாலம் விரிவாக்கம் செய்யப்பட்டது.இதுவரை,புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் சாலை சரி செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டதால், கரடு முரடாக உள்ளது. பாலத்தின் ஒரு பகுதியில் மட்டும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் தார் சாலை அமைக்கப்படாமல் விடப்பட்டுள்ளது.அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் ஒரு புறமாக அதாவது தார் சாலை உள்ள பகுதி வழியாக தான் சென்று வருகின்றன. மேலும், பாலம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ைஹமாஸ் விளக்கு பல ஆண்டுகளாக எரியாமல் உள்ளதால், அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் நடந்து வருகிறது.எனவே, குருவிநத்தம் கிராமத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட துாக்கு பாலத்தில், தார் சாலை அமைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X