| வில்லியனுாரில் ஊதாத சங்கு சீரமைக்க நடவடிக்கை தேவை Dinamalar
வில்லியனுாரில் ஊதாத சங்கு சீரமைக்க நடவடிக்கை தேவை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
02:23

வில்லியனுார்: வில்லியனுாரில் காட்சி பொருளாக உள்ள சங்கை சீரமைத்து, செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.வில்லியனுார் பகுதியில் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் தி.மு.க., நியமன எம்.எல்.ஏ., வேணுகோபால் முயற்சியால் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த 2000ம் ஆண்டில் அண்ணா சிலை பகுதியில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சங்கு அமைத்தார்.புதியதாக அமைக்கப்பட்ட சங்கு, இயங்குவதற்கு மின் சப்ளை வழங்காததால் அருகே சிலை பகுதியில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு, பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் மூலம் குறித்த நேரத்தில் சங்கு இயக்கி வந்தனர்.ஒவ்வொரு நாளும் காலை 5:00 மணி துவங்கி தொடர்ந்து காலை 8:00 மணி, பகல் 12:00 மணி, மாலை 5:00 மணி மற்றும் இரவு 8:00 மணி ஆகிய நேரங்களில் சங்கு முழங்கும்.சங்கு சத்தத்தை கேட்டு பள்ளிக்கு செல்லுவோர் மற்றும் வேலைக்கு செல்லுவோர் தயாராவார்கள், இதனால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் சங்கு பயனுள்ளதாக இருந்தது.சில ஆண்டுகள் மட்டுமே இயங்கி வந்த வில்லியனுார் சங்கு, பஞ்சாயத்து நிர்வாகம் சரியான முறையில் நிர்வாகிக்காமல் கிடப்பில் போட்டனர். தற்போது காட்சி பொருளாக உள்ள சங்கை, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் சீரமைத்து, புதிய தலைமுறையினருக்கு சங்கு குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், மீண்டும் சங்கு ஓசை கேட்கநடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X