அரைவேக்காட்டில் பேசிய கமல் கருத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 மே
2019
02:37
பதிவு செய்த நாள்
மே 20,2019 02:23

தேர்தல் பரப்புரையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதி என்று தெரிந்து பேசிய, நடிகர் கமலின் பேச்சு, சரித்திர உண்மைகளுக்கு மாறுபட்டது.காந்தி என்பவர், அனைவராலும் இன்றும் மதிக்கப்படுபவர்.


சுதந்திரம் வந்ததும், ஆட்சிக் கட்டிலை ஒதுக்கியவர். அவர் வாழ்ந்த எளிமை வாழ்க்கையை, மாற்றிக்கொள்ள விரும்பாதவர். அரசுப் பதவியில் வீற்றிருந்த பல தலைவர்கள், டாடா, பிர்லா போன்றவர்கள், அவரைத் தேடி ஆஸ்ரமத்திற்கு வந்தது வரலாறு.தன் குடும்பத்தை சரியாக பாதுகாக்காதவர் என்பதை, அவர் மகனே பதிவு செய்த தகவல்கள் உண்டு.இவை எதற்காக என்றால், 1946 முதல், 1947 ஆகஸ்டுக்கு பின்னும், பாகிஸ்தானில் இருந்து விரட்டப்பட்ட அனைவரையும், டில்லி முதல், பல்வேறு இடங்களில் குடியமர்த்திய பெருமை, நம் அரசியல் நாகரிகத்தின் அடையாளம்.இப்பழைய சரித்திர சம்பவங்களை வெளிப்படுத்தினால், அது சமுதாயத்தில், மோதலாக மாறும் என்று, நேரு கருதினார். பாகிஸ்தானில் இருந்து, குற்றுயிரும் கொலையுயிருமாக வந்த பல ஆயிரம் பேர், இன்று சமூகத்தில் நல்ல நிலையுடன் இருப்பதற்கு, நம் சகிப்புத்தன்மையும், அஹிம்சையும் காரணம்.அஹிம்சை என்பது, இந்தியாவில் காலம் காலமாக உள்ள தத்துவம். காந்தி அதை, அரசியலில் முன்னிறுத்தினார்.எவராக இருந்தாலும், ஹிந்து என்றால் இளக்கார மாக பேசலாம் என்பது, போலி மதச்சார்பின்மை வந்ததன் அடையாளம்.


பிரபல வழக்கறிஞர், ஜெத்மலானி, முன்னாள் பிரதமர், மன்மோகன், பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி ஆகிய அனைவரும், பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்தவர்கள்.நடிகர் கமல், தன் புதிய கட்சி நிலைத்து நிற்கும் முன், எல்லா விஷயங்களிலும், புதிது புதிதாக கருத்து கூறுவதும், அவரது நடிகர் என்ற பின்புலம், அதை பெரிதாக்க வசதியாகவும் ஆகிவிட்டது. தவிரவும், காந்தியை பிரார்த்தனைக் கூடத்தில் சுட்டுக் கொன்ற, நாதுராம் கோட்சேயை, யாரும் கடவுளாக மதிப்பது இல்லை. அவன், நம் மக்களை இம்சித்து, பாகிஸ்தான் மத வழி நாடாக மாறியதால் ஏற்பட்ட பாதிப்பை அதிகமாக சிந்தித்து நொந்தவன்.அன்றைய நிலையில், பெரிய கட்சியாக இருந்த, ஹிந்து மகா சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அடிப்படைகளை வெறுத்து ஒதுக்கியவன்.


இன்று கமலின், 'சுதந்திர இந்தியாவின் முதல் ஹிந்து தீவிரவாதி கோட்சே' என்ற பேச்சும், வேறு சில தலைவர்கள் எங்கோ, யாரோ வைத்திருக்கும், கோட்சே சிலையை ஏன் உடைக்கவில்லை என்பதும், முற்றிலும் அர்த்தமற்றது.கோட்சே கொலை செய்த பின், அவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஏற்றி, அவன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. முதலில் கோட்சே, தான் செய்த காரியத்தை கண்டு கலங்கவில்லை. மாறாக, 'நான் தான், காந்தியை சுட்டு வீழ்த்தினேன்; அங்கிருந்து ஓடவில்லை' என்று கூறி, 'நீதிமன்ற விசாரணை எதற்கு? என்னை துாக்கில் தொங்க விடுங்கள்; அரசு சாப்பாட்டை, எனக்காக செலவழிக்க வேண்டாம்' என்றான்.இதையடுத்து, அவ்வழக்கை விசாரித்த நீதிபதி மிஸ்ரா, 'ஜஸ்டிஸ் ஆன் டிரையல்' என்ற புத்தகத்தில், தன் பதவிக்காலம் முடிந்த பின், 1965களில் எழுதினார்.அப்போது, பிரின்ட் மீடியா தாக்கம் மட்டும் இருந்தது. வானொலி, அரசு ஏஜன்சியாகும். ஆகவே, இப்புத்தகம் நிறையவே விற்பனை ஆனது. மேலும், காந்தியை சுட்டதும், வானொலியில் நேருவும், படேலும், 'எ பெனடிக் ஹிந்து காந்தியை சுட்டான்' என்று கூறியதும், நாட்டில் மதக் கலவரம் வராமல் தடுத்த சீரிய முயற்சியாகும்.ஆனால், காங்கிரஸ் ஆட்சி, அப்புத்தகத்தை தடை செய்தது. எதிர்க்கட்சிகளும், காந்தியின் முடிவு பரிதாபமாக நடக்க காரணமாக இருந்த, கோட்சேயின் கொலைவெறிக் கருத்தை ஆதரிக்கவில்லை.


இப்போது, இத்தனை ஆண்டுகள் கழித்து, கமல் பரப்புரை தேவையா? மேலும், தன் குடும்பத்தினர், 'ஹிந்துக்கள்' என்ற அவர் பேச்சு, அரசியலில் அரைவேக்காட்டு தனமாகும். பின், சமாளிப்பு அறிக்கையும் விட்டிருக்கிறார்.அதற்கு ஒருபடி மேலாக, 'ஹிந்து என்ற வார்த்தை, நம் மதத்தினர் பயன்படுத்தாத வார்த்தை' என்கிறார். அரபு நாடுகளுக்கு செல்லும், நம் முஸ்லிம் சகோதரர்களை, 'அவர்கள் ஹிந்து முஸ்லிம்' என்றழைப்பதை, அவருக்கு யாரும் சொல்லித் தரவில்லை போலும்.தான் வசதியாக, சினிமா துறையில் செழித்திருந்த போது, தன் சொந்த ஊரான பரமக்குடிக்கு, அதன் சுற்றுச்சூழல் துாய்மைக்கு என்ன செய்தார் என்பது, அவருக்கே தெரியும்.அரசியலமைப்பு சட்டம் தந்த பேச்சுரிமை என்பது, வரையறையற்றது அல்ல; வரலாற்றை திரித்து பேசுவது, அந்தந்த தலைவர்களின் சரித்திரத்தின் சொற்ப அறிவைக் காட்டுவதாகும்.பா.ஜ.,வின் புதிய பெண் சாமியார் உளறலும், பின் மன்னிப்பு கேட்டதும், தன் கட்சியில், 'காந்திய சோஷலிசம்' என்ற கருத்து பின்பற்றப்படுகிறது என்ற அறியாமையே.இளைய தலைமுறையினர், வரலாற்றை நன்றாக அறிந்து, இவர்களை ஒதுக்குவதற்கு, இக்கருத்துசர்ச்சையானதும் நல்லதே.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sangeedamo - Karaikal,இந்தியா
21-மே-201911:02:49 IST Report Abuse
Sangeedamo நான் எப்போது சொல்லும் கருத்து இதுதான். தயவு செய்து, இளைய சமுதாயத்தினரே இந்தியாவின் உண்மையான வரலாற்றை, நீங்கள் படித்து உணருங்கள் உண்மையை , நம் எதிர்கால சந்ததியினரும் அறிந்திட உதவுங்கள் தமிழகத்தில் தன்னை அறிவி ஜிவி என்று மார்தட்டிக்கொள்ளும் பல ஜந்துக்கள் ஆட்டம் அப்போதுதான் முடிவுக்கு வரும் என்பதை உணருங்கள்.,.. உண்மை ஜெயித்திட தோள்கொடுங்கள்... வருங்காலம் வளம் பெற்றிட உதவுங்கள்....
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-மே-201904:06:33 IST Report Abuse
மலரின் மகள் தலையங்கம் பிரசுரமாகும் அன்றைய பொழுதில் அதை முதல் பக்கத்தில் பிரத்தியேகமாக வெளியிடலாமே
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-மே-201904:05:31 IST Report Abuse
மலரின் மகள் EXCELLENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X