| பருத்தி பயிர் பாதுகாப்பு விவசாயிகளுக்கு பயிற்சி Dinamalar
பருத்தி பயிர் பாதுகாப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
02:24

காரைக்கால்: காரைக்காலில் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து விசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.காரைக்கால் மாவட்ட வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை சார்பில் கோட்டுச்சேரி, தென்னங்குடி, மேலக்காசாகுடி, நெடுங்காடு, திருநள்ளார், விழிதியூர் மற்றும் அம்பகரத்துார் ஆகிய கிராமங்களில் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.கூடுதல் வேளாண் இயக்குநர் முகமது தாசிர் ஆலோசனையில் நடந்த இம்முகாமிற்கு துணை இயக்குநர்(இடுப்பொருள்) கணேசன், பருத்தி பயிர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். ஆத்மா துணை திட்ட இயக்குநர் ஜெயந்தி, நேரு வேளாண் கல்லுாரி பூச்சியல் துறை தலைவர் குமார், உதவி பேராசிரியர் தேவராஜ் ஆகியோர் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்தனர். மேலும் வேளாண் அலுவலர்கள் பருத்தி சாகுபடி, மகசூல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர். முகாமில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X