| உரம் தட்டுப்பாடு விவசாயிகள் அவதி Dinamalar
உரம் தட்டுப்பாடு விவசாயிகள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
02:26

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியில் அரசு மூலம் வழங்கப்படும் உரம் தட்டுப்பட்டால் விவசாயிகள் பெரிதும் அவதியடைகின்றனர்.வேளாண்துறை சார்பில், நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள உழவர் உதவியகம், பாசிக் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் நன்மை அடைந்து வந்தனர்.தற்போது பாசிக், உழவர் உதவியகம் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரங்கள் போதுமானதாக வழங்க முடியவில்லை, இதனால் அதிக விலை கொடுத்து தனியார் உரக்கடையில் தேவையான மருந்துகள், விதை நெல்கள், உரங்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளதால், விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.விவசாயிகள் நலன் கருதி உழவர் உதவியகம் மற்றும் பாசிக் மூலம் விதை நெல், உரம் மற்றும் பூச்சி மருந்துகள் தடையின்றி வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X