| போக்குவரத்து நெரிசலில் திணறும் நேரு வீதி Dinamalar
போக்குவரத்து நெரிசலில் திணறும் நேரு வீதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
02:28

புதுச்சேரி: போக்குவரத்து நெரிசலால் திணறும் நேரு வீதியில், வணிக நிறுவன ஊழியர்களின் வாகனங்களை, கட்டண வாகன நிறுத்தில் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.புதுச்சேரி நகரப்பகுதி சாலைகளில் வாகன நெரிசல் உச்சகட்டத்தில் உள்ளது.பெரும்பாலான வணிக நிறுவனங்களில், பார்க்கிங் வசதிகள் இல்லாததால், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக நேரு வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.இதற்காக, நேரு வீதி மார்கெட் எதிரில் உள்ள பழைய சிறைச்சாலை வளாகம் வாகன நிறுத்த இடமாக மாற்றப்பட்டது. இங்கு, 24 மணி நேரத்திற்கு பைக் நிறுத்த ரூ. 8, காருக்கு ரூ. 20, ஆட்டோவுக்கு ரூ. 10 என கட்டணம் வசூலிக்கின்றனர். பெரும்பாலன வாகனங்கள், கட்டண நிறுத்த இடத்தில் நிறுத்தப்படுவதில்லை. மாறாக நேரு வீதி முழுவதும் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.நேரு வீதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட துணி, நகை உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளது. இவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் வாகனங்கள் அனைத்தும், தங்களின் கடை எதிரே பார்க்கிங் செய்து கொள்கின்றனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், வாகனங்களை நிறுத்த இடம் இல்லை. இதனால், நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து கொண்டுசென்றாலும், வாகன நெரிசலை சரி செய்ய முடிவதில்லை.நெரிசலை சமாளிக்க, நேரு வீதி வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்களை, சிறை வளாக பார்க்கிங்கில் நிறுத்த கட்டண சலுகை அளிக்க வேண்டும். கட்டண நிறுத்தில் வாகனங்களுக்கு 24 மணிநேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைத்து, 12 மணிநேரம், 6 மணிநேரம் என பிரித்து குறைந்த கட்டணம் நிர்ணயித்தால் வாகன ஓட்டிகள் பயன்படுத்துவர், நிழல் தரும் வகையில் ெஷட் அமைக்க வேண்டும். பின்பு, நேரு வீதி, கொசக்கடை வீதி முழுவதும் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் மட்டுமே நேரு வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X