| சுற்றுலா பயணி உயிரிழப்பு Dinamalar
சுற்றுலா பயணி உயிரிழப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
02:32

புதுச்சேரி: புதுச்சேரிக்கு குடும்பத்தோடு சுற்றுலா வந்த பயணி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.திருவண்ணாமலையை சேர்ந்தவர் இளையராஜா,40; போட்டோகிராபர். இவரது மனைவி நிர்மலாதேவி. இவர்கள் குடும்பத்தோடு புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். வரும் வழியில் நேற்று முன்தினம் மயிலம் முருகன் கோவிலுக்கு சென்ற போது, திடீரென இளையராஜாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடன் அவர், அங்குள்ள மெடிக்கல் ஒன்றில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். பின், புதுச்சேரி அருகே பத்துகண்ணில் உள்ள தனியார் சுற்றுலா மையத்திற்கு சென்றனர்.அங்கு, மீண்டும் இளையராஜாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடன் அவரை, அவரது மனைவி நிர்மலாதேவி, தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.இதுகுறித்து நிர்மலாதேவி அளித்த புகாரின்பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X