| நடப்பாண்டில் விபத்துகளில் 65 பேர் பலி புதுச்சேரியில்தான் இந்த பரிதாபம் Dinamalar
நடப்பாண்டில் விபத்துகளில் 65 பேர் பலி புதுச்சேரியில்தான் இந்த பரிதாபம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
02:33

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை நடந்த சாலை விபத்துகளால், 65 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.புதுச்சேரியில் மக்கள் தொகை பெருக்கத்தைவிட வாகனங்களில் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப சாலை வசதி மேம்படுத்தப்படவில்லை. தற்போதுள்ள சாலைகளும், ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கி விட்டது. இதனால், வாகன நெரிசல், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுவதால், தினசரி ஏராளமான விபத்து நிகழ்ந்து வருகிறது. இந்த விபத்துகளில் பலர் ஊனமடைவதுடன், விலை மதிப்பில்லாத உயிரிழப்பும் ஏற்படுகிறது.விபத்துக்களை தடுக்க போலீசார் தீவிர முயற்சிகள் எடுத்தாலும், விபத்துகள் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் குறைந்த பாடில்லை. கடந்த 2017ம் ஆண்டு 1454 விபத்து வழக்குகளும், 239 விபத்து உயிரிழப்பு வழக்கு பதிவாகியுள்ளது.கடந்த 2018ம் ஆண்டு 1432 விபத்து வழக்குகளும், 158 உயிரிழப்புகள் ஏற்பட்டது.இந்த ஆண்டில் கடந்த 13ம் தேதிவரை மாநிலத்தில் நடந்த விபத்துகளில் 65 பேர் இறந்துள்ளனர்.அதில், புதுச்சேரியில் பிராந்தியத்தில் 45 பேரும், காரைக்காலில் 17 பேர், மாகியில் இருவர், ஏனாமில் ஒருவர் சாலை விபத்தில் இறந்துள்ளனர். நுாற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.தொடரும் சாலை விபத்து உயிரிழப்புகளால், ஒவ்வொரு குடும்பத்திலும் பொருளாதார அளவில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இது சமூக பொருளாதார அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், புதுச்சேரியில் வாகனங்கள் அதிகரித்து விட்டது. பிள்ளைகள் மீது வைத்துள்ள பாசம் காரணமாக, அதிவேகமாக செல்லக்கூடிய விலை உயர்ந்த வாகனங்களை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர். குடிப்பழக்கம் உடைய சில இளைஞர்கள் போதையில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டும்போது, விபத்தில் சிக்கி அதிக அளவில் உயிரிழக்கின்றனர்.பெரும்பாலான சாலை விபத்துகளில் இளைஞர்கள், நடுத்தர வயதினரே அதிகம் இறக்கின்றனர். விபத்து உயரிழப்புகளை, மதுபோதையால் விபத்து, அதிவேகத்தால் விபத்து, சாலையில் ஏற்பட்டுள்ள பழுதால் விபத்து என மூன்று வகையாக பிரிக்கலாம். அதில், குடிபோதையால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகளே முதலிடம் வகிக்கிறது என்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X