| மாணவி விடுதி கட்ட நடவடிக்கை தேவை Dinamalar
மாணவி விடுதி கட்ட நடவடிக்கை தேவை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
02:35

நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் பகுதியில் மாணவியர் விடுதி கட்ட அரசு துாரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம் பகுதியில் அரசு மேல்நிலைலப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொழில் பயிற்சி மையம் மற்றும் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்வி நிறுவனங்களில் மதகடிப்பட்டு, தவளக்குப்பம், புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் பகுதி மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.இவர்கள் தினசரி பள்ளி மற்றும் கல்லுாரிக்கு வந்து செல்ல வெகு துாரம் பஸ்சில் பயணம் செய்ய வேண்டியுள்ளதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால், அரசு சார்பில் கரியமாணிக்கம் பகுதியில் மாணவர் விடுதி கட்டப்பட்டது. அதில், வெளியூர் மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். ஆனால் மாணவிகளுக்கு விடுதி கட்டப்படாததால், மாணவிகள் தினமும் பஸ்சில் சென்று வர வேண்டியுள்ளது. இதனால், நேரம் விரயமாவதோடு, மழை காலங்களில் பெரிதும் அவதிப்படுகின்றனர்.ஆகையால், மாணவியரின் நலன் கருதி நெட்டப்பாக்கம் அல்லது கரியமாணிக்கத்தில் மாணவியர் விடுதி கட்டட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X