| பூட்டிக் கிடக்கும் நுாலகங்கள் அரசு நிதி வீணாகும் அவலம் Dinamalar
பூட்டிக் கிடக்கும் நுாலகங்கள் அரசு நிதி வீணாகும் அவலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
06:24

சாத்துார் : சாத்துார் மற்றும் வெம்பக்கோட்டை ஒன்றியக் கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நுாலகங்கள் பூட்டிக் கிடப்பதால் அரசின் நிதி வீணாகிறது.ஊராட்சிப் பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல கிராமங்களில் நுாலகங்கள் கட்டப்பட்டு தற்காலிக பணியாளர் மூலம் நுாலகங்கள் செயல்பட்டு வந்தன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் ஊராட்சிப்பகுதிகளில் செயல்பட்டு வந்த நுாலகங்கள் செயல்படாமல் பூட்டிக் கிடக்கின்றன.



இதில் உள்ள புத்தகங்களும் பராமரிப்பின்றி வீணாகும் நிலை உள்ளது. கிராம மாணவர்கள் கல்வியறிவு பெறவும் பயனுள்ள வகையில் போட்டித் தேர்விற்கு தயாராகும் வகையில் திறக்கப்பட்ட நுாலங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வேண்டும். பல கட்டடங்கள் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளன. கட்டடங்கள் சீரமைத்து மீண்டும் நுாலகங்கள் திறக்கவும், தேவையான நுால்கள் வாங்கவும் ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X