| திறக்கப்படாத சுகாதார வளாகம் கட்டமைப்பு இல்லாத வாறுகால் Dinamalar
திறக்கப்படாத சுகாதார வளாகம் கட்டமைப்பு இல்லாத வாறுகால்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
06:27

அருப்புக்கோட்டை : திறக்கப்படாத பொது சுகாதார வளாகம், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பொறுக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம், குடிநீர் சப்ளை இல்லாததால், தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவலம், காட்சிப்பொருளாக உள்ள அடிகுழாய்கள் மற்றும் மினி பவர் பம்ப்கள் என பல்வேறு சிரமங்களில் திண்டாடி வருகின்றனர் அருப்புக்கோட்டை திருவள்ளுவர் நகர் மக்கள்.அருப்புக்கோட்டை நகராட்சி 9 வது வார்டிற்கு உட்பட்டது திருவள்ளுவர் நகர். மெயின் தெருவில் நகராட்சியினர் பேவர் பிளாக் கற்களை பதித்து, ரோட்டை உயர்த்தி விட்டனர்.



இதனால் ரோடு உயர்ந்து, வீடுகள் பள்ளத்தில் போய் விட்டது. நகர் பள்ளமான பகுதியில் இருப்பதால், மழைக்காலத்தில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இங்கு கட்டப்பட்டுள்ள நவீன பொது சுகாதார வளாகம் திறக்கபடாமலேயே பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். தெருக்களில் முறையான வாறுகால் கட்டமைப்பு இல்லை. கழிவுநீர் ரோட்டில் தான் விடப்படுகிறது. நகராட்சி குடிநீர் இந்த பகுதிக்கு வருவதில்லை. குடிநீரை அதிக விலை கொடுத்து தான் வாங்குகின்றோம். நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட பொது அடிகுழாய்கள், மினி பவர் பம்ப்கள் அனைத்தும் தண்ணீரின்றி காட்சிப்பொருளாக உள்ளன. தெருவிளக்குகள் இல்லை, ரோட்டின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளதால், வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது என இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.திறந்தவெளியிலேயே எல்லாம்இங்கு அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகம் கட்டி 2 வருடங்கள் ஆகியும், இன்னும் திறக்கப்படவில்லை.



இதனால், கழிப்பறை இன்றி திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கழிப்பறையை திறக்க சொல்லி, பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தனலட்சுமி, குடும்ப தலைவி, திருவள்ளுவர் நகர்சுகாதாரம் ரொம்ப மோசம்இப்பகுதியில் சுகாதாரம் படுமோசமாக உள்ளது. வாறுகாலின்றி கழிவுநீர் தெருவில் தேங்கிக் கிடக்கிறது. குப்பைக்கழிவுகள் ரோட்டில் கிடக்கிறது. குப்பை தொட்டிகள் இல்லை. மெயின் ரோட்டிலிருந்து வரும் ரோட்டில் கழிவுநீர் தேங்கி நடக்க முடியாத அளவிற்கு அலங்கோலமாய் உள்ளது.



மழைக்காலமானால், மழைநீரும். கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. தெருக்களில் வாறுகால் அமைத்து, கழிவுநீரை பிரதான வாறுகாலில் கொண்டு சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அருண், தனியார் நிறுவன ஊழியர், திருவள்ளுவர் நகர்குடிநீர் சப்ளை இல்லைநகராட்சி மூலம் வழங்கப்படும் வைகை மற்றும் தாமிரபரணி குடிநீர் பகுதிக்கு வருவதில்லை. நகர் முழுவதும் வழங்கப்படும் நகராட்சி குடிநீர், எங்கள் பகுதிக்கு மட்டும் வருவதில்லை. குடிநீரை அதிக விலை கொடுத்து தான் வாங்குகின்றோம்.



புழக்கத்திற்கான தண்ணீருக்காக நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட பொது அடிகுழாய்கள், மினி பவர் பம்ப்கள் காட்சி பொருளாகத் தான் உள்ளன. தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்றோம். நகராட்சி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாலமுருகன், தனியார் ஊழியர், திருவள்ளுவர் நகர்நடுத்தெருவில் மின்கம்பம்ரோட்டின் நடுப்பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்களில் செல்ல சிரமமாக உள்ளது. அவசரத்திற்கு ஆட்டோ கூட உள்ளே வர முடியவில்லை. ரோடும் மோசமான நிலையில் உள்ளது. மின்கம்பங்களில் மின்விளக்கு இல்லை.



இதனால், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் போது, ரோட்டின் நடுவில் இருக்கும் மின்கம்பங்கள் மீது மோத வேண்டியுள்ளது. மின்கம்பங்களை ரோட்டின் ஓரமாக அமைக்கவும், சேதமடைந்த ரோட்டை புதியதாக போடவும், மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்தவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-நாகார்ஜூன், தனியார் ஊழியர், திருவள்ளுவர் நகர்

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X