| மிரட்டும் வெறிநாய்கள்... பீதியில் ஸ்ரீவி., மக்கள் Dinamalar
மிரட்டும் வெறிநாய்கள்... பீதியில் ஸ்ரீவி., மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
06:28

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் ஒவ்வொரு தெருவிலும் நாய்கள் வெறியுடன் நடமாடி வருவதால், இரவு பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் மிகுந்த அச்சத்துடனும், பீதியுடனும் செல்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் 33 வார்டுகளில் பல தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது 10 நாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இது தவிர பஸ் ஸ்டாண்ட், ஆத்துகடை ரோடு, சிவகாசி ரோடு என பல பகுதிகளில் நாய்கள் கூட்டம் பரவலாக காணப்படுகிறது.



இந்நிலையில் இரவு நேரங்களில் பணிமுடித்து வீடு திரும்பும் மில் தொழிலாளிகள், ஓட்டல் தொழிலாளிகள், வெளியூர் சென்று திரும்புபவர்களை நாய்கள் மிரட்டும் விதத்தில் சத்தமிடுகிறது. புதியவர்களை பார்த்தால் விடாமல் துரத்துகிறது. இதனால் மக்கள் நாய்களுக்கு பயந்து அச்சத்துடனே வீடு திரும்புகின்றனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X