| பயன்பாடின்றி பாழடைந்த அரசு குடியிருப்புகள் Dinamalar
பயன்பாடின்றி பாழடைந்த அரசு குடியிருப்புகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
06:29

சிவகாசி : சிவகாசியில் சேதமைடந்து பயன்பாடில்லாமல் பாழடைந்துக் கிடக்கும் கட்டடங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.சிவகாசி யூனியன் அலுவலக வளாகத்தில் பின்புறம் அதிகாரிகள், அலுவலர்கள் தங்குவதற்காக குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தது. 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள் 20 வருடங்களாக பயன்பாட்டில் இல்லை. கட்டப்பட்ட ஆறு வீடுகளுமே முற்றிலும் சேதமடைந்து பாழடைந்துள்ளது.



கட்டடங்களைச் சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. பாம்பு , தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. சேதமடைந்த கட்டடங்களின் அருகிலேயே ஆனையூர் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் ஆனையூர் கிராம நிர்வாக அலுவலகமும் செயல்படுகின்றது. வரி , குடிநீர் கட்டணம் செலுத்துதல் உள்பட பல்வேறு தேவைகளுக்கு தினமும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.



வருபவர்கள் வெளியில் காத்திருக்கும் சமயத்தில் பாம்பு போன்றவை அருகில் நடமாடி பயத்தினை ஏற்படுத்துகிறது. ஒரு சிலர் சிறுநீர் கழிப்பதற்காக சேதமடைந்த கட்டடங்களின் அருகில் ஒதுங்குகின்றனர். அந்த சமயத்தில் கட்டடம் இடிந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும். அந்த இடத்தில் பயனுள்ள அரசு கட்டடங்கள் கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X