கண்காணிப்பு அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
06:30

காரியாபட்டி : ஆபத்தை உணராமல், அதிவேகத்தில் டூவீலரை ஓட்டி விளையாடும் இளைஞர்களையும், டூவீலரில் சுற்றி திரிந்து வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களையும் போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு பகுதியிலும் மாவட்ட எல்லை வரை இரவு, பகல் என ஹைவே போலீசார் ரோந்து சென்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் ரோந்து போலீசாருக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வாகனம் வழங்கப்பட்டு,அதில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கருவிகள் மூலம், அதிவேகமாக வரும் வாகனங்களை ஸ்கேன் செய்து,வேகத்தை குறைக்க டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, அபராதம் விதித்ததால், ஓரளவிற்கு விபத்து ஏற்படுவதை தடுக்க முடிந்தது.



மேலும் திருடர்களின் நடமாட்டமும் குறைந்ததால், இரவில் பயணம் செய்தவர்கள் தைரியமாக சென்றனர். சிறப்பாக செயல்பட்டு வந்த ரோந்து போலீசாரின் வேகம் தற்போது குறைந்துள்ளது. காரணம், அப்போது வழங்கப்பட்ட ஹைவே வாகனங்கள் பழுதாகி உள்ளன. அதில் இருந்ததுபோல், மாற்று வாகனங்களில் நவீன கருவிகள் இல்லை. குடி போதையில் அதிவேகமாக வரும் டூவீலர்களை கண்டறிய முடியவில்லை. கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு, தப்பி செல்லும் நபர்களை கண்டறிய சிரமம் ஏற்படுகிறது. இதனால், ஆபத்தை உணராமல் அதிவேகமாக டூவீலரை ஓட்டி விளையாடும் இளைஞர்கள், குடி போதையில் ஓட்டுபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.



பணியில் தொய்வு வந்துருச்சுதிருட்டு, வழிப்பறி சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதால், இரவில் யாரும் தைரியமாக வெளியில் செல்ல முடியவில்லை.முன்பெல்லாம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது, போலீசாரின் கண்காணிப்பு பணியில் தொய்வு காணப்படுவதால், திருட்டு கும்பல் நடமாட்டம் உள்ளது. வழிப்பறியில் ஈடுபடுபவர்கள் ஹெல்மெட் அணிந்து வருகின்றனர். அவர்களை பரிசோதிக்க வேண்டும். அதே போல், குடிபோதையில், லைசென்ஸ் இல்லாமல் டூவீலரை வேகமாக ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறது. கோடை விடுமுறையை கழிக்கும் இளைஞர்கள் டூவீலரை அதிவேகமாக ஓட்டி விளையாட்டு காட்டுவதால் பாதசாரிகள் பயந்து ஒதுங்குகின்றனர். இவற்றை கண்காணித்து கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X