சேதமான பாலத்தால் பயந்து ஓடும் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
06:31

விருதுநகர் : விருதுநகர் கணேஷ் நகரில் சேதமடைந்த பாலம், நகராட்சியால் சீரமைக்கப்படாததால், முதியவர் ஒருவர் ஓடைக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பாலத்தை கடக்க அச்சப்படுகின்றனர்.விருதுநகரில் கடந்தாண்டு பெய்த கனமழையில் பி.ஆர்.சி., டெப்போ அதை சுற்றியுள்ள பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. பி.ஆர்.சி., டெப்போவில் மழைநீர் புகுந்ததால் பஸ்கள் வெளி வர முடியாமல் சிரமப்பட்டன. மழைநீரை வெளியேற்ற பொதுப்பணித்துறையினர் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.



அப்போது கணேஷ்நகர் புற்றுக்கோயில் அருகே உள்ள பாலம் இடிக்கப்பட்டது. அந்த பாலம் வழியாக நகராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு கணேஷ் நகருக்கு சென்று விடலாம். தனியார் மருத்துவமனையும் அங்கு உள்ளதால் பொதுமக்கள், நோயாளிகள் அவ்வழியை அடிக்கடி பயன்படுத்தி வந்தனர். பாலம் இடிக்கப்பட்ட சில நாட்களில் அதை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைககப்பட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருந்தது.



தனியார் அமைப்புகள் உதவியுடன் பாலம் மணல் நிரப்பி சீரமைக்கப்பட்டது. ஆனால் தரமான முறையில் சீரமைக்கப்படவில்லை. இதில் அடிக்கடி வாகனங்கள் சென்று வந்ததால் பாலம் மேலும் சேதமடைந்தது.இந்நிலையில் நேற்று காலை சூலக்கரையைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் டூவீலரில் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்திருந்தார். பாலம் அருகில் வந்த போது சேதமடைந்த பள்ளத்தால் நிலைதடுமாறி ஓடைக்குள் விழுந்தார். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த பாலம் அருகே போதிய தெருவிளக்கு வசதியும் கிடையாது.



இதனால் பொதுமக்கள் இப்பாலத்தை கடக்க அச்சப்படுகின்றனர்.சாக்கடைக்குள் முதியவர் உயர் ரத்த அழுத்த பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு வந்த முதியவர் ஒருவர், சேதமடைந்த பாலத்தால் ஓடைக்குள் விழுந்து, உடல் முழுவதும் கழிவுநீரில் நனைந்து விட்டது. அவரை பார்க்கவே பாவமாக இருந்தது. நகராட்சியின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை விபத்துகள் நடக்க போகிறதோ என தெரியவில்லை. அதற்குள் நகராட்சி நிர்வாகம் பாலத்தை தரமான முறையில் சீரமைக்க வேண்டும்.-ஆண்டவர், கூலித்தொழிலாளி, விருதுநகர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X