| தொட்டியில் ஓட்டை வீணாகும் குடிநீர் Dinamalar
தொட்டியில் ஓட்டை வீணாகும் குடிநீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
06:47

திருமங்கலம், : திருமங்கலம் உசிலம்பட்டி ரோடு ஆஞ்சநேயர் கோயில் தெருவில் தொட்டியில் ஓட்டை ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.இங்கு ஒரு குடம் குடிநீரை மக்கள் 10 ரூபாய்க்கு வாங்குகின்றனர். நகராட்சி சார்பில் தெருக்களில் தொட்டிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்கின்றனர். கோடையை முன்னிட்டு குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. விலைக்கு குடிநீர் வாங்க நுகர்வோர் தயாராக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மினி வேன்களில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. நகராட்சி லாரிகளில் சப்ளையாகும் குடிநீர் போதியதாக இல்லை. குடிநீரை தேடி காலிக்குடங்களுடன் மக்கள் அலைகின்றனர்.ஆஞ்சநேயர் கோயில் தெருவில் 450 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் நிரப்பி சப்ளை செய்யப்படுகிறது. தொட்டி பழுதடைந்துள்ளது. இதில் ஓட்டைகள் ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. தட்டுப்பாடு நிலவும் நிலையில் குடிநீர் வீணாவது குறித்து மக்கள் வேதனை தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X